தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் மீது அதிக மோகம் உடையவர்களாக இருந்து வருகின்றனர். அப்படி இந்த மொபைல் மூலம் தான் நினைத்த பொருட்களை அமர்ந்த இடத்திலேயே வாங்கி கொள்ளவும் செய்கின்றனர். ஏன் சொல்ல போனால் பிறந்த குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்காகவும், அக்குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காகவும் செல்போனை கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் குழந்தைக்கு பெரிய ஆபத்துகள் உருவாகும் என பெற்றோர்கள் புரிந்து கொள்வது அவசியம். இப்படி குழந்தைகளுக்கு மொபைல் கொடுக்கும் பொழுது அதில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குழந்தைகள் பாதிப்புகள் என்னென்ன?
- மொபைல் திரையில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் குழந்தையின் கண்களை பாதிப்படைய செய்யும்.
- இதனால் குழந்தைக்கு தூக்கமின்மை ஏற்படும்.
- அதுமட்டுமின்றி அறிவுத்திறன், மூளை செயல்பாடு உள்ளிட்டவை பாதிக்கப்படும்.
- குழந்தைகளுக்கு பேச்சுகள் தடுமாற ஆரம்பிக்கும்.
- மனநல குறைபாடு முதல் குழப்பம், சிந்தனை தடைபடுதல், உடல் பருமன், மோசமான எலும்பு உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும்.
எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீர்கள். அப்படி கொடுக்க நினைத்தீர்கள் என்றால் குறிப்பிட்ட நேரங்களில் கொடுங்கள். ஞாயிற்றுக்கிழமை செல்போன் கொடுக்க அனுமதிக்காமல் மற்ற நாட்களில் செல்போன், மடிக்கணினி இவற்றினை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கொடுக்கலாம். அதுமட்டுமின்றி இப்படி இருக்காமல், குழந்தைகளை அருகில் இருக்கும் பூங்காக்களுக்கு அழைத்து சென்று குஷி படுத்துங்கள்.