நவீன வசதிகளுடன் தயாராகும் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரைபிரபலங்கள் போன்ற அனைவரும் தமிழகம் முழுவதும் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனங்கள் கோவையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
நவீன வசதிகளுடன் தயாராகும் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மேலும் கோவையில் தான் முன்னாள் முதலமைச்சர்களான MGR,கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கும் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனம் தயார் செய்யப்படுகிறது.
பிரச்சார வாகனத்தின் நவீன வசதிகள் :
தற்போது மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் நவீன சொகுசு வசதிகளுடன் கூடிய பிரச்சாரவாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வாகனங்களில் செல்பவர்கள் வசதியாக அமர நவீன இருக்கைகள், வாகனங்கள் மேற்க்கூரை வழியாக தலைவர்கள் வசதியாக பேசுவதற்கு ஹைட்ராலிக் லிப்ட், LED தொலைக்காட்சி, WIFI வசதிகள் மற்றும் வாகனத்தை சுற்றி மின்விளக்குகள் மற்றும் தலைவர்கள் பேசும் கருத்துக்கள் மக்களுக்கு தெளிவாக கேட்க வேண்டும் என்பதிற்க்காக நவீன ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல் ! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை – முழு தகவல் இதோ !
மேலும் நவீன வசதிகளுடன் கூடிய பயோ கழிப்பறை போன்ற அதிநவீன வசதிகளுடன் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.