நடிகை அஞ்சலி
தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்து தனது நடிப்பை தொடங்கியவர் தான் நடிகை அஞ்சலி. என்னதான் அவர் தெலுங்கில் அறிமுகமாகி இருந்தாலும்,அவரின் நடிப்பு திறமைக்கு தீனி போட்டது என்றால் அது தமிழ் சினிமா தான் என்று எல்லாருக்கும் தெரியும். இவர் நடித்த கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இவர் தொடர்ந்து காதல் கிசுகிசுவில் மாட்டி வருகிறார். அந்த வகையில் பிரபல நடிகரான ஜெய்யுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் நண்பர்கள் என்று தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து நபர் ஒருவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தினால் அவருடைய நடிப்பினை கவனிக்க முடியாமல் போனது. மேலும் தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரது திருமணம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை அஞ்சலி கடந்த ஒரு வருடமாக விவாகரத்தான தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையா என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.