வாக்காளர் அட்டை
லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து அரசியல் களம் களைகட்டி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் ஒட்டு சேர்க்க அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி விட்டனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுவாக 18 வயது நிரம்பியவர்களுக்கு ஒட்டு போடும் உரிமை இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதனால் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்து வருகின்றனர். சிலருக்கு வாக்காளர் அட்டை கிடைத்த போதிலும் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு கிடைத்த பாடில்லை. மேலும் ஒருவர் ஓட்டு போட புகைப்படத்துடன் கூடிய ஆவணங்கள் முக்கியமாக கருதப்படுகிறது. எனவே இந்த அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களை காண்பித்து ஓட்டு போடலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடி க்குரிய பட்டியலில் இடம் பெற்று இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.