பாராளுமன்ற தேர்தல்
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் பறக்கும் படையினர் ஒரு இடம் விடாமல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பொருட்களை எடுத்து வர வேண்டாம் என்று அறிவித்திருந்தனர்.. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது, பஞ்சாப்பில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் வந்த காரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அப்போது அவர்களிடம் ரூ.69 ஆயிரத்து 400 இருந்தது. பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் பதறிப்போன பெண் ஒருவர், ” நாங்கள் இங்கு சுற்றி பார்க்கத்தான் வந்தோம். எங்களுக்கு இவ்வளவு பணம் கொண்டு வர கூடாது என்பது தெரியாது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்த பணத்தை வைத்து தான் நாங்கள் எங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல வேண்டும். தயவு செய்து கொடுத்து விடுங்கள் என்று கண்ணீர் விட்டு கதறினார். ஆனால் பறக்கும் படை அதிகாரி உரிய ஆவணங்கள் இருந்தால் காண்பித்து பணத்தை வாங்கி செல்லுங்கள் என்று பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார். அந்த பெண் அழுது புலம்பும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதாவது பறக்கும் படையினர் சோதனையின் போது மக்கள் தான் அதிகம் பாதிப்படைகின்றனர். சொல்ல போனால் சிறு, குறு வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் மருத்துவ செலவுக்காக பணம் எடுத்து செல்பவர்கள் தான் பாதிப்படைகிறார்கள் என்று கூறி அதை தடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.