
திடீர் தீ விபத்து
மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் என்ற நகரில் அமைந்துள்ள மகாகாளேஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு அந்த கோவிலில் பஸ்ம ஆர்த்தி என்ற சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது கோவிலின் கருவறைக்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்த தீ விபத்தில் கோவில் தலைமை அர்ச்சகர் உட்பட கிட்டத்தட்ட 14 பேர் படுகாயம் அடைந்தனர். தற்போது படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மகாகாளேஸ்வர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவிடம் பேசியதாக கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.