இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் . தமிழ்நாட்டில் நாடளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக கூட்டணி அமைத்து தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் OPS க்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தான் அதிமுக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் என சொல்லிக்கொண்டுருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட உள்ளார். இந்நிலையில் வாளி, பலா, திராட்சை போன்ற சின்னங்களில் இருந்து ஏதேனும் ஒரு சின்னத்தை தனக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த வகையில் OPS இரட்டை இலை சின்னத்தை கைவிட்டுவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

நெருங்கும் தேர்தல்.., இந்த சின்னம் தான் வேண்டும்?.., தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்த சீமான்!!

இவ்வளவு நாள் நாங்கள் தான் உண்மையான அதிமுக இரட்டை இலை எங்களுக்கு தான் என கூறிக்கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது தனக்கு சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை முறையிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *