Home » செய்திகள் » IPL 2024., இரண்டாவது வெற்றி எந்த அணிக்கு?.., சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்?

IPL 2024., இரண்டாவது வெற்றி எந்த அணிக்கு?.., சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்?

IPL 2024., இரண்டாவது வெற்றி எந்த அணிக்கு?.., இன்று சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்?

சென்னை-குஜராத் மோதல்

IPL கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி திருவிழா கோலமாக மாறி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. நேற்று சின்னசாமி ஸ்டேடியத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து பெங்களூர் விளையாடி அபார வெற்றியை சூடியது RCB அணி. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் டைட்டன் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்த இரண்டாவது போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இருப்பினும் சென்னை அணிக்கு தான் சப்போர்ட் அதிகமாக இருக்கும் என்று கடந்த போட்டியிலேயே தெரிந்து விட்டது.

இம்முறையாவது தோனி களத்தில் இறங்குவாரா? என்று CSK ஃபேன்ஸ் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 தடவையும் வென்று இருக்கின்றன. ,அதுமட்டுமின்றி சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை நன்கு அறிந்த தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன், விஜய் சங்கர், சாய் கிஷோர் ஆகியோர் குஜராத் அணியில் இருக்கும் நிலையில் அந்த அணிக்கு அது கூடுதல் பலமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம்.., பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் ஆம் ஆத்மி கட்சியினர் – டெல்லியில் பரபரப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top