5 ஓபிஎஸ் போட்டி
பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் அவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார். சுயேட்சை சின்னத்தில் போட்டியிட போகும் ஓபிஎஸ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அதே தொகுதியில் அவரை எதிர்த்து 4 பேர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இருக்கிறார்கள். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று ஓ பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இப்படி ஒரே தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.