இன்னைக்கு ஒரே புடி.., "வில்லேஜ் குக்கிங் சேனல்'' தாத்தா மருத்துவமனையில் அனுமதி.., இப்போது எப்படி இருக்கிறார்?இன்னைக்கு ஒரே புடி.., "வில்லேஜ் குக்கிங் சேனல்'' தாத்தா மருத்துவமனையில் அனுமதி.., இப்போது எப்படி இருக்கிறார்?

“வில்லேஜ் குக்கிங் சேனல்” பெரியசாமி

தமிழில் யூடியூப்பில் ஏகப்பட்ட சேனல்கள் ஓப்பன் செய்து மக்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில்  வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . இவர்களது சேனலை கிட்டத்தட்ட சுமார் 24 மில்லியன், அதாவது 2.4 கோடி சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி கடந்த 2019 தேர்தல் காலகட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி கூட இந்த வில்லேஜ் குக்கிங் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இந்த சேனல் முக்கியமான நபராக இருக்கும் தாத்தா பெரிய தம்பி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தாத்தா பெரிய தம்பி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வில்லேஜ் குக்கிங் சேனலின் அட்மின் சுப்பிரமணியன் வேலுச்சாமி சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தாத்தா பெரியசாமி இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். தற்போது அவர் உடல்நிலை நன்றாக இருக்கிறது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

சகோதரர் விஜய்யோட சேர்ந்து பணியாற்ற தயார்.., தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ் மகன் இணைகிறாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *