சித்தார்த் – அதிதி ராவ்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் சித்தார்த் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் அவர் 10 வருடங்களாக செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா, காற்று வெளியிடை, சைக்கோ போன்ற படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமான அதிதி ராவ்-வை காதலித்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து நேற்று சித்தார்த் – அதிதி ராவ் தெலுங்கானாவில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் இது குறித்து அதிதி ராவ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதாவது நேற்று நடைபெற்றது கல்யாணம் இல்லையாம்.., வெறும் நிச்சயதார்த்தம் தானாம். போட்டோவுடன் அவரே வெளியீட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ எப்ப கல்யாணம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.