நாம் தமிழர் கட்சி:
தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் சீமான். மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலிலும் தனித்து களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாம் தமிழர் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மரிய ஜெனிபரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்குசேகரித்தார்.
தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் சீமான்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அஞ்சமாட்டோம் :
கடந்த தேர்தல்களில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேறு ஒரு கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து நடத்தப்பட்ட அனைத்து சட்டபோராட்டங்களிலும் சீமான் தோல்வியை தழுவினார். இதனால் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி ! பெயர் பட்டியலை கொடுத்த அரசியல் கட்சிகள் – இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் !
இந்நிலையில் விவசாயி சின்னம் கிடைக்காமல் போனதற்க்கு பாஜக தான் காரணம் என்றும், தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு பாரபட்சமாக செயல்படுவதாகவும், எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அஞ்சமாட்டோம். மேலும் எங்கள் சின்னத்தை கூட ஒலிவாங்கி என்று கூறினால் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியாத நிலையில், மைக் என்று சொல்ல வேண்டி உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.