சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பாரில் விபத்து;
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் முக்கிய பகுதியான ஆழ்வார்பேட்டையில் பிரபலமான தனியார் பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாருக்கு தினசரி ஏகப்பட்ட பேர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இந்த பாரின் முதல் தளம் எதிர்பாராத விதமாக இடிந்து கீழே விழுந்தது. இந்த சம்பவத்தின் போது கீழ் தளத்தில் இருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸ் இறந்த மூன்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் உள்ளே மாட்டிக்கொண்ட மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி அருகில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் அதில் ஏற்பட்ட அதிர்வினால் தான் முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து உள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பார் உரிமையாளரை விசாரித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.