திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் பறக்கும் படையினர் பணம் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் பறிமுதல்:
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நடப்பு விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வந்தது. குறிப்பாக ஓட்டுக்காக பணம், சலுகைகள் போன்றவைகள் கட்சி தலைவர்கள் மக்களுக்கு கொடுப்பதை தடுக்கும் விதமாக பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் நல்லூர் தேவாலயம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அந்த வழியாக 36 வயது தக்க பெண் ஒருவர் தள்ளாடியபடி வந்துள்ளார். அவரை சோதனை செய்யும் போது அவருடைய இடுப்பில் மூன்று கட்டு பணம் இருந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதை பறிமுதல் செய்து எண்ணி பார்த்த போது அவர் ஒன்றரை லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து அவரிடம் கேட்டபோது. தான் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் என்றும் பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த பணம் பிச்சை எடுத்த பணம் என்று கூறியுள்ளார். ஆனால் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் அந்த பெண்ணை பி[பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.