கடிதம் எழுதிய நடிகர் சிவக்குமார் ! விசிக தான் ஜெயிக்க வேண்டும் ! பாமக மேல உள்ள கோபம் இன்னும் தீரலையோ !

கடிதம் எழுதிய நடிகர் சிவக்குமார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சியான பாஜக போன்ற கட்சிகள் கூட்டணியமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து உள்ளனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அந்த கட்சியின் பொது செயலாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார் அவருக்கு ஆதரவாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மக்களவை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து நடிகர் சிவக்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ரவிக்குமார் போன்ற வேட்பாளர்களை தமிழ்மக்கள் தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ! நாங்கள் தான் பாதுகாப்பு – பிரச்சாரத்தில் கனிமொழி கருத்து !

மேலும் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் வெளியான போது பாமக சூர்யாவிற்கு எதிராகவும், விசிக சூர்யாவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment