
நடிகர் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், உனக்கு அரசியல் தேவையா? என்று பிரபலம் ஒருவர் கேட்டது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் விஜய். தற்போது இவர் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அரசியலில் கலக்கி வருகிறார். கடந்த மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி தளபதி 69 படத்திற்கு பிறகு முழு அரசியல்வாதியாக களமிறங்க இருக்கிறார். பொதுவாக விஜய் படம் என்றாலே ஏதாவது முட்டுக்கட்டை இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சொல்லப்போனால் ரிலீஸ் தேதி தள்ளி போகும் அளவுக்கு செல்லும். அந்த வகையில் ரிலீஸ்க்கு அதிக தடைகள் எழுந்த படம் என்றால் அது முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் தான். இந்த படத்திற்காக பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். அப்படி ஆதரவு கொடுத்த பிரபலங்களில் ஒருவர் தான் இயக்குனர் பாரதிராஜா. அவருக்கு நன்றி கூற அவர் வீட்டுக்கு விஜய் சென்ற போது, ‘விஜய் உனக்கு அரசியல் தேவையா’ என கேட்டாராம். இந்த தகவலை இயக்குனர் பாரதிராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.