மீனாவை கல்யாணம் பண்ணிக்க எனக்கு ஓகே?.., குழந்தை இருந்தாலும் பரவால்ல?.., சர்ச்சையை கிளப்பிய முக்கிய பிரபலம்!!மீனாவை கல்யாணம் பண்ணிக்க எனக்கு ஓகே?.., குழந்தை இருந்தாலும் பரவால்ல?.., சர்ச்சையை கிளப்பிய முக்கிய பிரபலம்!!

பிரபல நடிகை மீனாவை கல்யாணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பிரபல  யூடியூபர் ஒருவர் கூறி சர்ச்சையை கிளப்பிய சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மீனா

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் மீனா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இதற்கிடையில் கடந்த 2009ம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நீண்ட வருடம் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். இதனால் மனமுடைந்து போன மீனா வெளியே தலையே காட்டாமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் திரையில் தலை காட்ட தொடங்கியுள்ளார்.

மேலும் கடந்த சில நாட்களாக அவரின் இரண்டாம் திருமணம் குறித்து செய்திகள் வெளியாகி வந்தது. இந்நிலையில் பிரபலம் ஒருவர் மீனாவை கல்யாணம் செய்ய  சம்மதம் தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் மோகன்லால் நடித்த “ஆராத்” என்ற படத்தை விமர்சனம் செய்து பிரபலமானவர் சந்தோஷ் வர்கீ. இவர் தான் மீனாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு குழந்தை இருந்தாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக, நடிகை நித்யா மேனன், கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனையும் தான் கல்யாணம் செய்து கொள்ள உள்ளதாக அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

உனக்கெல்லாம் அரசியல் தேவையா?.., Thanks சொல்ல வந்த தளபதிக்கு ஷாக் கொடுத்த பிரபல இயக்குனர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *