Home » சினிமா » மண்ணை விட்டு மறைந்த போதிலும் டேனியல் பாலாஜி செய்த காரியம்.., என்னா மனசு சார் உங்களுக்கு? ரசிகர்கள் நெகிழ்ச்சி!!

மண்ணை விட்டு மறைந்த போதிலும் டேனியல் பாலாஜி செய்த காரியம்.., என்னா மனசு சார் உங்களுக்கு? ரசிகர்கள் நெகிழ்ச்சி!!

மண்ணை விட்டு மறைந்த போதிலும் டேனியல் பாலாஜி செய்த காரியம்.., என்னா மனசு சார் உங்களுக்கு? ரசிகர்கள் நெகிழ்ச்சி!!

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தற்போது தன்னால் ஒரு உயிர் வாழ வேண்டும் என்று அவர் செய்து வைத்துள்ள காரியம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்றால் அது டேனியல் பாலாஜிக்கு இருக்கிறது. இவர் நடித்த காக்க காக்க, பொல்லாதவன், வடசென்னை, வேட்டையாடு விளையாடு, பிகில் உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டியிருப்பார். அவரின் நடிப்பு தற்போது வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இப்படி திடீரென அவர் இறந்த செய்தியை கேட்ட சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தற்போது அவர் உடல் அஞ்சலிக்காக புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய  வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடலுக்கு நேரில் சென்று வெற்றிமாறன், கவுதம் மேனன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த உலகை விட்டு மறைந்தும் தன்னால் ஒரு உயிர் வாழ வேண்டும் என்று அவர் செய்து வைத்துள்ள காரியம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது டேனியல் பாலாஜியின் கண்கள் தற்போது தானம் செய்யப்பட்டுள்ளது. அவர் இல்லை என்றாலும் அவருடைய கண்கள் இந்த உலகத்தில் நிலைத்து நிற்கும். அவர் மறைந்த முரளியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 

சித்தார்த்துடன் ஜோடி சேரும் நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top