மக்களவை தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட போது மகளிர் உரிமை தொகை குறித்து மக்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை
தமிழகத்தில் வாழும் பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மட்டும் உரிமை தொகையை வழங்கி வருகிறது. தற்போது லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்படி அமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர்களிடம் மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், விண்ணப்பித்த ஒரு கோடியே 63 லட்சம் பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை தேர்தலுக்குப் பிறகு உறுதியாக வழங்கப்படும் என உறுதி அளித்து வருகிறார். இதனால் பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.