நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் அரசுப் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு பயில சென்ற மாணவர்களுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளார்.
ரூ.1,000 உதவித்தொகை
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக மாணவிகளுக்கு மாநில அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் அமல் படுத்தபட்ட திட்டம் தான் ‘புதுமை பெண்’ திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் உயர்கல்வி பயிலும் ஏழை எளிய மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக மக்களவை தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, ” ‘புதுமை பெண்’ திட்டத்தின் கீழ் மாணவிகளின் உயர்கல்விக்கு உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது போல, அரசுப் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு பயில சென்ற மாணவர்களுக்கும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.