நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பறக்கும் படையினர் அதிகாரிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல்
நாட்டின் 18 வது பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதிகள் வெளியாகி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனையில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் நேற்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதே போல் கடந்த 25 ஆம் தேதி நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரின் காரை முழுவதுமாக சோதனை செய்யவில்லை என்று கோத்தகிரி குழந்தைகள் திட்ட அலுவலர் கீதா மீது புகார் எழுந்தது. இந்நிலையில் பறக்கும் படை அதிகாரி கீதாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.