எங்களோட சின்னத்திலயா போட்டி போடுற. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அந்த சின்னம் முன்னுரிமை அடிப்படையில் கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றுள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
எங்களோட சின்னத்திலயா போட்டி போடுற
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நாம் தமிழர் நிர்வாகிகள் கைது :
அந்த வகையில் திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் மாநில செயலாளராக இருப்பவர் ஆறுமுகம். அவர் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியுடன் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில் ஓசூர் வழியாக காரில் சென்று கொண்டிருந்த போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பாஜக மற்றும் பாமக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ! வண்டியின் முன் யார் நிற்பது வாக்குவாதம் சண்டையாக மாறியது !
இந்நிலையில் திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் மாநில செயலாளர் ஆறுமுகம் காவல் துறையிடம் புகார் அளித்ததன் பேரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கிருஷ்ணகிரி நகர செயலாளர் அருண்மொழி, கட்சி உறுப்பினர் கமல் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் நரேஷ் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.