கிளைமாக்ஸ் ட்விஸ்டில் அரளவிட்ட 3 படங்கள்.., சீட் நுனியில் உட்கார வைத்த உலகநாயகனின் அந்த படம்!!கிளைமாக்ஸ் ட்விஸ்டில் அரளவிட்ட 3 படங்கள்.., சீட் நுனியில் உட்கார வைத்த உலகநாயகனின் அந்த படம்!!

பொதுவாக புதிய படங்கள் ரிலீசாகும் போது ஸ்டார்ட்டான அரை மணி நேரத்தில் ரசிகர்கள் இது தான் இந்த படத்தோட கிளைமாக்ஸ் என்று கணித்து விட முடியும். மேலும் ஒரு படத்தோட கிளைமாக்ஸ் சொதப்பினால் போது அந்த படம் பிளப்பாகி விடும். ஆனால் கிளைமாக்ஸில் எதிர்பார்க்காத டிவிஸ்ட் வைத்த படங்கள் எத்தனையோ இருக்கிறது. அந்த வகையில் அப்பாடா, படம் முடிய போகுதுனு அக்கடான்னு சீட்ல உட்கார்ந்து இருக்கும் போது, அதுல எதிர்பார்க்காத டுவிஸ்ட்டா வச்சு, சீட்டு நுனிக்கு கொண்டு வந்துடும். அப்படி கிளைமாக்ஸ் சீனில் ஹைப்பை கிளப்பிய படங்களில் பெஸ்ட்  3 படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பீஸாக இருக்கும் கைதி படத்தில் அவர் செய்த சம்பவம் தமிழ் சினிமாவையே திருப்பி போட்டது என்று தான் சொல்ல வேண்டும். 10 வருடமாக சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி, போலீசை காப்பாற்றி கிளைமாக்ஸ் சீனில் பெரிய துப்பாக்கியை வைத்து ரவுடிகளை சுட்டு தள்ளிய போது கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதுமட்டுமின்றி கான்ஸ்டபிள் நெப்போலியனுடன் டெல்லி செய்யும்  சம்பவம் எல்லாம் புல்லரிக்க வைக்கும். அதுலயும் நெப்போலி, எவனோ ஒருத்தன் இல்ல, அவன் பேரு டெல்லி என்ற வசனத்தோடு படம் முடியும் போது அடுத்து என்னடா நடக்கும் ஏன்டா படம் முடிந்தது என்று தோணும்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தில் நடித்த கமலோட நடிப்பு பெருசா?,  த்ரிஷ்யம் கிளைமேக்சில் மோகன்லால் நடிப்பு பெருசா? என்று  பெரிய வாதமே நடந்து கொண்டு இருக்கிறது. பாபநாசம் மலையாள படத்தின் டப்பாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு சீனிலும்  கமலின்  டச் செமயா இருக்கும். குறிப்பாக கிளைமாக்ஸ் சீனில் கமல் அந்த பொணத்த எங்க பொதச்சு வைத்தோம் என்று சுயம்புலிங்கம் நினைச்சு பாப்பாரு, அப்ப தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் சீட் நுனியில் உட்கார்ந்து கைதட்டுகளை அள்ளி தெறித்திருப்பார்கள். ஏன் சொல்ல போனால் இந்த படம் டிவியில் ஒளிபரப்பானாலும் கூட  அந்த காட்சி வந்தாலும் எழுந்து நின்னு கை தட்டணும் போல இருக்கும்.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில படங்கள் மட்டும் முடிந்தால் மனத்தளவில் பாரமாக இருக்கும்.  அப்படி ஒரு படம் என்றால் அது அருவி தான். ஒரு பொண்ணுக்கு எயிட்ஸ் நோய் எப்படி பரவியது என்று தெரியாமல் அந்த பெண் ஒரு ஷோவில் கலந்து கொண்டு வெளுத்து வாங்கும் காட்சிகள் பின்னி பெடல் எடுத்திருக்கும். இந்த ஷோவில் கலந்து கொண்டவர்கள் கிளைமாக்ஸ் சீனில்  நோயின் தாக்கத்தால் உடல் மெலிந்து இருக்கும் அருவியை பார்க்கும் போது அழுகை தான் வரும். இறுதியில் அருவியின் கள்ளமில்லா சிரிப்பு நெருடலை கொடுக்கும். 

LSG Vs PBKS: முதல் வெற்றியை நோக்கி லக்னோ அணி.., பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *