வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை மத்திய அரசு குறைத்த நிலையில் தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலிண்டர் விலை குறைப்பு
மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக சமையல் எரிவாயு இருந்து வருகிறது. சமீபத்தில் மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் தற்போது வணிக பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது கடந்த 3 மாதங்களாக சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 36 அதிகரித்து 1,960.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.30.50 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஒரு வணிக சிலிண்டரின் விலை 1,930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை ஒரு சிலிண்டருக்கு 818 ரூபாய்க்கு எந்த மாற்றமுமின்றி விற்பனையாகிறது.