வருமான வரி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரி மாற்றங்கள்
பொதுவாக வருட வருமானம் லட்ச கணக்கில் வாங்கும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறைந்த சதவீதம் வரிப்பணமாக அரசாங்கத்திற்கு கட்ட வேண்டும். அதன்படி, வருட வருமானம் 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் அதில் 5 சதவீதம் வரி கட்ட வேண்டும். அதே போல் 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 20 சதவீதம் வரி கட்டணும். இந்நிலையில் 2024-25 ஆம் நிதியாண்டில் இன்று (ஏப்ரல் 1) முதல் வருமான வரி மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ரூ.5 கோடிக்கு மேற்பட்ட வருமானத்திற்கு விதிக்கப்படும் அதிகபட்ச கூடுதல் வரி (Surcharge) 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
- ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை வருமானத்திற்கு 5% வரியும்,
- ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும்,
- ரூ. 9 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும்,
- ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும்,
- ரூ. 15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படும்.
அரசு ஊழியர் அல்லாதோருக்கு வழங்கப்படும் விடுப்புச் சம்பளத்திற்கான ( leave encashment) வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.