ஆர்க்டிக் கடல் வளங்கள். பனியும் உண்டு.. எரிபொருளும் உண்டு.. என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளனர் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள். வருகிற 2030 ம் ஆண்டிற்குள் உலகில் பல எண்ணெய் கிணறுகள் வற்றிவிடலாம் என்று கருதப்படுகிறது. அதனால் புதிய இடங்களில் எண்ணெய் கண்டுபிடித்து எடுக்கவேண்டிய கட்டாயத்தில் பெரிய நாடுகள் உள்ளன.
ஆர்க்டிக் கடல் வளங்கள்
உலகம் முழுவதும் மனிதனின் தேவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே தான் உள்ளது. எதிர்காலத்தில் கனிம வளங்கள், எண்ணெய் வளங்கள் போன்றவற்றின் தேவையும் அதிகமாக உள்ளது. வருகிற 2030 ம் ஆண்டிற்குள் உலகில் உள்ள பல எண்ணெய் கிணறுகள் வற்றி விடலாம் என்று ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் அச்சப்படுகின்றன. அதனால் அவர்கள் உலகம் முழுவதும் தேடி இந்த பனி மூடிய ஆர்டிக் கடலில் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். ஆர்டிக் கடலின் அடியில் ஹைட்ரோகார்பன் படிமங்கள் அதிகமாக உள்ளன. அதனால் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவை நிறைய கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆர்டிக் கடலை எல்லையாக கொண்ட கனடா, டென்மார்க், நார்வே, ரஷ்யா, அமெரிக்கா போன்ற 5 நாடுகளும் சேர்ந்து ‘ஆர்டிக் டெவெலப்மென்ட் ஸ்ட்ராடெஜி’ என ஒப்பந்தம் செய்து கொண்டனர். ரஸ்சியாவிற்கு இந்த ஆர்டிக் கடலை சுற்றி பெரும் நிலப்பரப்பு உள்ளதால் இங்கே ஆராய்ச்சி செய்ய தனக்கு அதிக உரிமை உள்ளது என்று உரிமை கோருகிறது. இதற்காக அடுத்த 30 ஆண்டுகளில் 5000 பில்லியன் டாலர் வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளது.
ஜெராக்ஸ் மெஷின் பிறந்த கதை கையால் எழுத முடியாதவர் கண்டுபிடித்த அதிசயம் அதுவே அவரை பல கோடிக்கு அதிபதி ஆக்கிய வரலாறு !
சுவீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளும் ஆர்டிக் கடலை சுற்றி உள்ளதால் அவையும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. இதை இந்தியா, சீனா மட்டும் வேடிக்கை பார்க்குமா?. இந்தியா , சீனா மட்டுமில்லாமல் சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளும் சேர்ந்து பார்வையாளர் நிரந்தர அந்தஸ்தை பெற்றிருக்கின்றன.
உலகின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் ஆர்டிக் கடலில் கால் பதித்து எண்ணெய் எடுக்க தயாராகி விட்டன. பனிப்பாறைகளுக்கு அடியில் எண்ணெய் வளத்தை எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதற்குள் போட்டி குவிந்து போரே வந்துவிடும் போல. இதற்கு இடையில் இந்த எண்ணெய் வளங்களை எடுத்து செல்ல வழி தேவை. அவை பெரும்பாலும் ரஷ்யா, கனடா போன்றவை வழியாக தான் செல்ல வேண்டி உள்ளது. அதற்குள் இந்த இரு நாடுகளும் “இவை சர்வதேச கடல் பாதை அல்ல. எங்கள் நாட்டுக்கு மட்டும் சொந்தமான பாதை” என்று உரிமை கொண்டாடி வருகிறது. இதை எந்த நாடும் ஏற்று கொள்ளாது. அதனால் அந்த இரு நாட்டினரிடமும் அனுமதி வாங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வருங்காலத்தில் ஆர்டிக் பிரதேசம் வெறும் பனி மண்டலம் என்ற நிலை மாறி செல்வம் கொழிக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு பூமியாய் மாறப்போவது உறுதி. இதனால் 2030 க்கு பிறகு நமக்கு பெட்ரோல் பொருட்கள் சாதரணமாக கிடைக்கபோவதில்லை.