மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் விளங்கி வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து மக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். குறிப்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சிறையில் இருந்தபடியே அவர் அரசை வழி நடத்தி வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 28-ம் தேதி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 1ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வருகிற 15-ந் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட இருக்கிறார். நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போது அவரின் நீதிமன்ற காவலை நீட்டித்து வழங்கப்பட்டுள்ள உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.