AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது தற்போது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது பற்றி டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் AI டெக்னாலஜி பற்றி அவர் கூறியதாவது,
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இது மனித குலத்தை முடிவுக்கு கொண்டுவரும் :
தற்போது AI டெக்னாலஜி அதிகளவு வளர்ச்சி அடைந்துள்ளது. இது மனிதர்களை விட புத்திசாலித்தனமாக சிந்திக்கும் திறன் கொண்டவை. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் AI டெக்னாலஜியின் வளர்ச்சி என்பது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் நிலை ஏற்படும். இதனால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்திய பகுதிகளுக்கு பெயர் வைத்த சீனா ! 30 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சீன மொழியில் பெயர் – உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !
Great AI Debate என்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர் AI டெக்னாலஜி மனித குலத்தை முடிவுக்கு கொண்டுவரும் அளவுக்கு திறன் பெற்றது எனவும் நாம் மிகுந்த கவனத்துடன் தொழில்நுட்பங்களை கையாளவேண்டும். இது போன்ற விஷயங்களில் நாம் எதிர்மறையாக யோசிப்பதை விட நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.