தமிழகம் உள்ளிட்ட சில நாடுகளில் வெயில் கொளுத்தி கொண்டிருக்கும் நிலையில் சென்னை வானிலை மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக சூரியன் கண்முடித்தனமாக சுட்டெரித்து வருகிறது. கோடை காலம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் ஜூன் மாதம் வரை கடுமையான வெப்பம் நிலவுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த வருடம் வரலாற்றில் முதன் முறையாக வெப்பத்தின் தாக்கம் 105 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே பயப்படுகிறார்கள். எப்படா மழை பெய்யும் இந்த வெயிலின் கொடுமையில் இருந்து எப்போது மோட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக சென்னை வானிலை மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது பொதுவாக ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தான் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் வெப்பநிலை கொழுத்த ஆரம்பித்து விட்டது. மேலும் இனி வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு நினைக்க முடியாத அளவுக்கு அதிகரிக்கலாம். இதன் விளைவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படலாம். எனவே மக்கள் எதற்கும் தயாராக இருக்கும்படியும், வெளியே வர வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.