சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 வெளியீட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
PS5 ஸ்லிம்
முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் சோனி நிறுவனம் கஸ்டமர்களை கவரும் நோக்கத்தில் புது புது வித்தியாசமான அம்சங்களுடன் மொபைல் போனில் இருந்து பல பொருட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும் புதிய PS -5 கன்சோல் டிஸ்க் மற்றும் டிஸ்க்-லெஸ் வெர்ஷன்களில் கிடைக்கிறது. பிளே ஸ்டேஷன் 5 வெளியான மூன்று ஆண்டுகள் கழித்தே பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த நியூ மாடல் மெல்லியதாகவும், எடை கம்மியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்னர் வெளியான பி.எஸ். 5 மாடலில் 825 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 1 டி.பி. ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சோனி பிளே ஸ்டேசன் 5 ஸ்லிம் மாடலின் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44, 990 என்றும் டிஸ்க் வெர்ஷன் விலை ரூ. 54, 990 என்ற விலையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த PS5 ஸ்லிம் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்ய இருக்கிறது.