
பிதாமகன் பட நடிகர்
கடந்த சில காலமாக சினிமா துறையில் இருந்த பல முக்கிய நடிகர்கள் உயிரிழந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு நடிகர் உயிரிழந்த சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் விஸ்வேஸ்வர ராவ் (62).
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் எழுத்தாளர் மற்றும் இயக்குநராகத் சினிமா கெரியரை தொடங்கினார். அதன்பிறகு காமெடி நடிகராக உருவெடுத்த இவர் சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்து வந்தார் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை பெற்ற அவரின் மரணத்திற்கு ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.