தமிழகத்தில் இந்த ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை காலம் ஆரம்பித்ததை தொடர்ந்து வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த 20 நாட்களுக்கு வெப்ப சலனம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்த நிலையில், தற்போது அந்த வெப்பத்தை குளிர்விக்கும் விதமாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து தான் சென்னை வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், தென்காசி, சிவகங்கை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.