மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில், மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் நடக்க இருக்கும் தேர்தலில் பணம், நகைகள் மக்களிடம் கை மாறக்கூடாது என்ற நோக்கத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தற்போது தொடர்ந்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஆம்பூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மன்சூர் அலிகான் அனுமதி வாங்காமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது தேர்தல் அதிகாரி வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது ஏற்கனவே அனுமதி பெறாமல் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.