ரேஷன் கடைகளில் இனிமேல் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் கடை
நாடு முழுவதும் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் அரசு ரேஷன் கடை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில மற்றும் மத்திய அரசு கொண்டு வரும் சலுகைகளும் ரேஷன் கடை மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் முறைகேடு நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனைத் தடுப்பதற்காக அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைதாரர்களின் உறுப்பினர்கள் கட்டாயம் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் குடும்பத்தினர் கை ரேகைகளை பதிவு செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இருப்பினும் இன்னும் சில மக்கள் இதை செய்யாமல் இருந்து வருவதால், மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அது இப்போது முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கைரேகை பதிவு செய்யாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து உணவு பொருள் வழங்கல் துறை கைரேகை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வழக்கம் போல் உணவு பொருட்கள் கிடைக்கும். மேலும் மக்கள் கட்டாயம் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.