பாராளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் அதிமுக கட்சியின் முக்கிய புள்ளி வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வருகிற 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது தான் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. மேலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து நேற்று பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரி துறையினருக்கு புகார் தெரிவித்த நிலையில், பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் வீட்டையும் மற்றும் அவருடைய நகைக்கடையிலும் கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து ரூ. 50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி பாலசுப்பிரமணியத்தின் வீட்டில் இருந்து தங்கக் கட்டிகள் மற்றும் ஆவணங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.