நடிகை டாப்ஸி
தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை டாப்ஸி. இதையடுத்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த அவர், தெலுங்கு, இந்தி என உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் ஜெயம் ரவியின் ‘ஜன கன மன’ படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் அவர் டென்மார்க்கை சேர்ந்த பாட்மிட்டன் பயிற்சியாளர் மத்யாஸ் போ என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார். மேலும் இவர்கள் ராஜஸ்தான் உதய்பூரில் யாருக்கும் தெரியாமல் கடந்த மாதம் இறுதியில் கல்யாணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி அவர்களின் திருமணம் சீக்கிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்ததாக திரை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமணமான போட்டோ வீடியோ எதையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தார் டாப்ஸி. இப்படி இருக்கையில் டாப்ஸி – மத்யாஸ் போ கல்யாண வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் டாப்ஸி மற்றும் மத்யாஸ் போ திருமணக் கோலத்தில் உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கல்யாண வீடியோ வெளியானதால் டாப்ஸி அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது..