பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒரு அதிமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை ரூ. 40 லட்சம் ரொக்கம் பணம் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் – அதிமுக நிர்வாகி வீட்டில் 40 லட்சம் பறிமுதல்
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வருமானவரித்துறை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வீட்டுக்கு ரெய்டு விட்ட வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது திருப்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அதாவது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வாக விளங்கிய கே.ஜி.ரமேஷின் அக்காவுடைய மருமகன் நவீன என்பவர் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்திய போது ரூ. 40 லட்சம் ரொக்கம் பணம் சிக்கியது. அதுமட்டுமின்றி பல ஆவணங்களும் சிக்கியுள்ளன. மேலும் இந்த ரொக்க பணம் திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளரான கலிய பெருமாளுக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பட்டுவாடா பணமாக இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் நவீனை அழைத்துச் சென்று, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.