தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்கு சாவடிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை :
தற்போது தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து அனைத்து கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளதால் தமிழ்நாடு அரசியல் களம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகள் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இதில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குசாவடிகளாகும். மேலும் மிகக்குறைந்த பதற்றமான வாக்கு சாவடிகளில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 39 மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக மதுரையில் 511 வாக்குசாவடிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் – தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது.., வீடு தேடி வரும் அதிகாரிகள்!!
புதிய தொழில்நுட்ப வாக்குப்பதிவு இயந்திரம் :
தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மார்க் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்