இயக்குனர் தேசிங்கு பெரியசாமி சிம்புவின் 48வது படத்தை இயக்கி வரும் நிலையில், அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை படுத்தியுள்ளது.
சிம்பு பட இயக்குனரிடம் பண மோசடி
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ” கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்”. இப்படத்தை தேசிங்கு பெரியசாமி என்பவர் இயக்கி இருந்தார். தற்போது இவர் சிம்பு 48 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தேசிங்கு பெரியசாமி சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில், ” தேசிங்கு பெரியசாமி இடம் உதவி இயக்குனராக முகமது இக்பால் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். அதுமட்டுமின்றி அவரது வீட்டின் கணக்கு வழக்குகளையும் முகமது இக்பால் தான் பார்த்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து தேசிங்கு உதவியாளரிடம் 2 நாட்களுக்கு முன் சுமார் 150 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வருமாறு அனுப்பிய நிலையில், அவர் அடகு வைத்ததில் கிடைத்த 3 லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பணத்தை கேட்ட போது, தனக்கும், தனது மனைவிக்கும் அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தேசிங்கு பெரியசாமி குறிப்பிட்டுள்ளார். தற்போது காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.