நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஓட்டுப்போட சொந்த ஊர் செல்ல கூடியவர்களுக்காக போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் : ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பஸ்கள்
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும் இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் மாதம் 3ம் தேதி நடைபெற இருக்கிறது. அதுமட்டுமின்றி ஏப்ரல் 19ம் தேதி மக்கள் எந்தவித இடையூறு இன்றி வாக்குப்பதிவு செய்ய ஊதியத்துடன் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியூரில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளன.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தேர்தலையொட்டி 17,18 ஆகிய தேதிகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பிற போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து 7 ஆயிரம் சிறப்பு பஸ்களும் பிற நகரங்களிலிருந்து 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. எனவே ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயண திட்டத்தை வகுத்து கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.