Home » செய்திகள் » பெற்றோர்களே – பிறப்பு சான்றிதழில் இனிமேல் இது கட்டாயம் – ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

பெற்றோர்களே – பிறப்பு சான்றிதழில் இனிமேல் இது கட்டாயம் – ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

பெற்றோர்களே - பிறப்பு சான்றிதழில் இனிமேல் இது கட்டாயம் - ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் அரசு சார்பாக வழங்கப்படுவது வழக்கம். அந்த சான்றிதழில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், ஜாதி பெயர், ரத்தம் வகை உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் பிறப்பு சான்றிதழ் பதிவுக்கான படிவம் 1-ல் சில ஒன்றிய உள்துறை அமைச்சகம் திருத்தங்களுடன் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் தாயின் மதம், தந்தையின் மதம் என இரண்டு கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். தேர்வு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கும். இந்த வசதி குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இது குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது,  பிறப்புப் சான்றிதழில் சட்ட தகவல் மற்றும் புள்ளி விவர தகவல் என இரண்டு தகவல்கள் அமைந்திருக்கும். அதில் பெற்றோரின் மதம் என்பது புள்ளிவிவர தகவலுக்காகவே பெறப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட ரீதியாக பார்த்தால் பிறப்புப் சான்றிதழில் இனி பெற்றோரின் ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் இருப்பின் அதையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முகவரிப் பெட்டியில் மாநிலம், மாவட்டம், டவுன் அல்லது கிராமம், வார்டு எண், பின்கோடு ஆகியன சேர்க்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்ற தேர்தல் : ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்ல  சிறப்பு பஸ்கள் – எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top