நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் – வருடந்தோறும் ரூ.1 லட்சம்
பாராளுமன்றம் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கைகளை அடுத்தடுத்து வெளியீட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இணைந்து தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளனர். அதில் தேர்தல் அறிக்கையில் முக்கியமான 10 அம்சங்கள் பின்வருமாறு,
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
- மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான பென்ஷன் பணம் ரூ.1000 ஆக அதிகரிப்பு.
- அடுத்த வருடம் முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு
- இட ஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்ட திருத்தம் செய்யப்படும்.
- மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பங்களுக்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்
- தூய்மை பணியாளர்கள் பணியில் இருக்கும் பொழுதே உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
- பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.
- சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்.
- பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும்.
- அரசியல் சாசனம் 8வது அட்டவணையில் ஏராளமான மொழிகள் சேர்க்கப்படும்.
- கட்டாய கல்வி சட்டத்தில் 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை.
- NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்.
- குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
- பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இட ஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
- ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
- ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படாது.
- தேசிய கல்வி கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.