மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாணவர்களே – தமிழகத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் வாக்கு பதிவு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே முதற்கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் தற்போது 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இறுதித் தேர்வுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்த தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே தமிழகத்தில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.