Home » செய்திகள் » மும்பை அணியில் இணையும் சூர்யகுமார் யாதவ்? – அப்படி போடு.., சிங்கம் சிங்கம் களம் இறங்கிடுச்சு!!

மும்பை அணியில் இணையும் சூர்யகுமார் யாதவ்? – அப்படி போடு.., சிங்கம் சிங்கம் களம் இறங்கிடுச்சு!!

மும்பை அணியில் இணையும் சூர்யகுமார் யாதவ்? - அப்படி போடு.., சிங்கம் சிங்கம் களம் இறங்கிடுச்சு!!

அடுத்து நடக்க இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் இணைய இருப்பதாக சோசியல் மீடியாவில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா பதவியேற்ற நிலையில் இருந்து, நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை தழுவினர். இந்நிலையில் ரோஹித் சர்மா மும்பை அணியில் இருந்து விலக போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மும்பை அணி பெரும் கவலை கிடப்பில் இருக்கும் நிலையில், தற்போது MI ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரின் போது  கணுக்கால் பகுதியில் தசைநார் கிழிவால் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது,  குடலிறக்கம் (ஹெர்னியா) பாதிப்பு இருந்ததை கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜெர்மனியில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நீண்ட நாள் ஓய்வுக்கு பிறகு தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதை வைத்து பார்க்கும்போது அடுத்தாக நடக்க இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அவர் இணையலாம். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைவதற்கு முன்னதாக 100 சதவிகித உடல் தகுதியுடன் இருக்கிறார். மேலும், போட்டிகளில் பங்கேற்க தயாராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. எனவே மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றியை ருசிக்குமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
 

இனிமேல் மசாஜ் அவங்க மட்டும் தான் செய்யணும் – நீதிமன்றம் கொடுத்த அதிரடி டிவிஸ்ட்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top