மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை குறைவு
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், இதன் முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து திமுக கட்சியுடன் கூட்டணி வாய்த்த வைகோ தலைமையிலான ம.தி.மு.க. கட்சி சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில், திருச்சியில் மக்களவைத் தேர்தலுக்கான, ‘24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்,ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது கூடவே கூடாது, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட 74 வாக்குறுதிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். மேலும் , “திருச்சி, புதுக்கோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படும்” என்று கூறினார்.