என்னடா சொல்றீங்க - காமெடி நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்.., ரசிகர்கள் வாழ்த்துக்கள்!என்னடா சொல்றீங்க - காமெடி நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்.., ரசிகர்கள் வாழ்த்துக்கள்!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் தான் லட்சுமி மேனன். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதன்பின் அவருக்கு எந்த பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடைசியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பட வாய்ப்புக்காக தன்னுடைய அழகிய போட்டோக்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு மனைவியாக  லட்சுமி மேனன் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கிறதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

SBI வங்கி தேர்வர்களே – மெயின்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? ., முக்கிய தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *