நாடுகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் பள்ளி இயங்கும் நேரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இனிமேல் பள்ளிகள் இந்த நேரத்தில் தான் இயங்கும்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே பயப்படுகிறார்கள். மேலும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இப்பொழுது நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால், இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி இனி வரும் நாட்களில் பள்ளி இயங்கும் நேரங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மாற்றி அமைக்க வேண்டும். மேலும் இயன்றவரை சீக்கிரமாக கோடை விடுமுறை வழங்க வேண்டும். ஏனென்றால் இந்த வெயிலினால் பள்ளி மாணவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே இப்போது இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். கர்நாடகாவில் வெப்பத்தினால் ஏற்படும் நோயினால் 500 பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.