Home » செய்திகள் » இனி டெபாசிட் செய்ய க்யூவில் நிற்க வேண்டாம் – UPI மூலம் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம் – RBI அறிவிப்பு!

இனி டெபாசிட் செய்ய க்யூவில் நிற்க வேண்டாம் – UPI மூலம் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம் – RBI அறிவிப்பு!

இனி டெபாசிட் செய்ய க்யூவில் நிற்க வேண்டாம் - UPI மூலம் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம் - RBI அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது இரண்டு புதிய வசதிகள் குறித்த முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது இரண்டு புதிய வசதிகள் குறித்த முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுவாக வங்கியில் பணம் டெபாசிட் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் கையில் வைத்திருக்கும் பணத்தை டெபாசிட் இயந்திரங்கள் மூலம் செலுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எனவே இனிமேல் ஈசியாக டெபாசிட் செய்ய,  டெபாசிட் இயந்திரங்களில் யு.பி.ஐ பயன்படுத்தி டெபாசிட் செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் மொபைல் வாலட் நிறுவனங்களின் மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலமாக வாலட் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை செய்து கொள்ளும் வசதி இருந்து வருகிறது. இந்நிலையில் 3ம் தரப்பு யு.பி.ஐ ஆப்களிலும் வாலட்டுகளைப் யூஸ் செய்து பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இனிமேல் பள்ளிகள் இந்த நேரத்தில் தான் இயங்கும்.., புதிய மாற்றத்தை கொண்டு வந்த பள்ளிக்கல்வித்துறை!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top