ஐபிஎல் 18 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார சாதனையை படைத்துள்ளது.
ஐபிஎல் T20 போட்டியின் வரலாற்றை மாற்றி எழுதிய மும்பை இந்தியன்ஸ்
நடப்பாண்டு ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 22ம் தேதி ஆரம்பித்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய மும்மை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி அணிக்கும் 20 வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தொடங்கியது. முதல் வெற்றியை பதிக்க களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 234 ரன்களை குவித்தது. இதையடுத்து 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 205 ரன்களை எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் நேற்று நடந்த போட்டியில் மும்பை அணி மாபெரும் சாதனையை படைத்துள்ளது. அதாவது இதுவரை நடந்த T20 கிரிக்கெட் போட்டியில் அரைசதம் அடிக்காமல் 200 ரன்களுக்கும் மேல் ரன் குவித்த சாதனையை இரண்டு அணிகள் வைத்துள்ள நிலையில், தற்போது யாருமே அரைசதம் அடிக்காமல் 234 ரன்களை குவித்து மும்பை அணி மூன்றாவது அணியாக இந்தப் பட்டியலில் இணைந்ததோடு மட்டுமின்றி அதிக ரன் குவித்த அணியாகவும் மும்பை மாறியுள்ளது. அதுமட்டுமின்றி நேற்று நடந்த ஆட்டத்தில் 8 வது விக்கெட்டாக ரிச்சர்ட்ஸன் ரோஹித் சர்மாவின் கேட்சால் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ரோகித் சர்மா 100 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.