33 ஆண்டுகளுக்கு ரஜினிக்கு ஜோடியாகும் 54 வயது நடிகை.., தலைவர் 171 படத்துல இவங்க தான் ஹீரோயின்?33 ஆண்டுகளுக்கு ரஜினிக்கு ஜோடியாகும் 54 வயது நடிகை.., தலைவர் 171 படத்துல இவங்க தான் ஹீரோயின்?

லோகேஷ் கனகராஜ் படைப்பில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலங்களிலே சென்சேஷன் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் தான் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி இப்படத்திற்கான டைட்டில் டீசர் வெளியாக உள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171ல் அவருக்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகை குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஷோபனா தான் நடிக்கவுள்ளாராம். ஆனால், இது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்று தெரியவில்லை. அப்படி அவர் தான் நடிக்க போகிறார் என்றால், ரஜினியுடன் 33 ஆண்டுகளுக்கு பிறகு சேர போகிறார் என்று அர்த்தம். இவர்கள் இருவரும் 33 வருடங்களுக்கு முன்னர் தளபதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்…, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான முக்கிய தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *